தொடர் கனமழையால் வால்பாறைக்கு உட்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை குறைவாக காணப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் பெய்த மழையினால் ஒரு சில ஆறுகளில் நீர்ஓட்டம் அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது கடந்த இரு நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மிக அதிகமான மழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைப்பகுதியான நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ், வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் 160 முழு கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக உயர்ந்துள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...