விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். சிலை வைக்கும் அமைப்பினர் உரிய காவல்துறை அனுமதி பெற்று 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். காகிதக்கூழ் மற்றும் களி மண்ணால் ஆன சிலைகள் வைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் பேசுதல் கூடாது. ஊர்வலங்கள் செல்லும் போது ஒலி எழுப்புவதோ, மேளங்கள் அடிப்பதோ, கோஷங்கள் போடுவதோ கூடாது. ஊர்வலத்தில் தடி,கம்பு மற்றும் ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க கூடாது. சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள்; 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் ஒரு சிறு சம்பவங்கள் கூட இல்லாத வகையில் இந்த விழா நடைபெற அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...