71-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு கோவை வஉசி-யில் சிறப்பு நிகழ்ச்சி

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இந்திரம், சலவை பெட்டி மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, விபத்து நிவாரண உதவித்தொகை என மொத்தம் 554 பயனாளிகளுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்க உள்ளார்.

பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகளும் வழங்க உள்ளார்.

எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...