ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள தேவராயபுரம் சமுதாய கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 13) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 92 பேர் கலந்துகொண்டனர்.

இதில் 13 பேர் கண்புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இந்த முகாமில் 11 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கபட்டது.

முன்னதாக, கடந்த ஜூன் 25ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16ம் தேதி விராலியூர் கிராமத்திலும் ஜூலை 30-ம் தேதி மத்வராயபுரத்திலும் இதேபோன்ற கண் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
