கட்சியில் நடப்பது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே தொடர்ந்து ஆட்சி 4 வருடம் நீடிக்கும் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உலக யானைகள் தினம் முன்னிட்டு இன்று கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானை- மனித மோதலை தடுக்க களிறு திட்டம் என்ற பெயரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது எனவும் தெரிவித்தவர், இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து கும்கி யானைகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு காட்டு யானைகளை கட்டுப்படுத்த அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், தண்ணீர் இல்லாமல் ஊருக்குள் புகும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழிகள் ஏற்படுத்தவும், வனப்பகுதிக்குள் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பொறுத்து இருந்து பார்க்கவும் என்றவர் தற்போது, நடைபெறுவது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே எனவும் ஆட்சி தொடர்ந்து 4 வருடம் நீடிக்கும் என தெரிவித்தார். 

ஓ.பி.எஸ் துணை முதல்வர் என்பது ஊடகங்களில் வரக்கூடிய செய்தி எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பதே சரியானது என தெரிவித்தார். டி.டி.வி.தினகரனை 420 என்பது வாய் தவறி சொல்லி இருக்கலாம் என்றவர் 420 என சொல்லியதற்கு சில விளக்கங்கள் அவர் சொல்லி இருப்பதாகவும் கூறிய சீனிவாசன், இதை டேக்-இட்-இஸியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி டி.டி.வி. தினகரனை 420 என்று சொன்னதே தனக்கு தெரியாது எனவும் முதல்வர் சொல்லி இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசினால் அது தவறு என்றவர் இதை அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். 

பொருளாளர் நியமனம் குறித்து ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தவறாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசியல் பிரச்சினைகளை பேசி தீர்க்க நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உதகையில் நடைபெற உள்ளதை அடுத்து அது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களுடன் தானும் பங்கேற்க இருப்பதாகவும் இதில் நூற்றாண்டு விழா குறிந்து ஆலோசிக்க இருப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...