கோவையில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இன்று தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார பேரணிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் தூய்மை கிராமமாக மாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால்  ஏற்படும் நோய்கள், வருமான இழப்பு, மருத்துவ செலவு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு, ஆகியவற்றை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறை பயன்பாட்டினை பொதுமக்களிடத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. பெண்களின் கௌவுரவத்தை காப்பதற்கும், மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காத்திடவும் கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நம் கிராமத்தை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாற்றுதல் நம் ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ளது என தெரிவித்தார்.



முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் முழு சுகாதார தமிழகம்!!! - முன்னோடி தமிழகம்!!! என்ற உறுதிமொழியை சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...