மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீலகிரி ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், பாரிஸ் ஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000  வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...