கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருந்து தற்போது வரையிலான பல்துறை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடத்திற்கு பதிவறை மாற்றப்படும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழைய பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழைய ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்கள் பதிவறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் கிளப் ஹேமில்டன் கிளப் என்னும் பெயரில் இரயில் நிலையம் முன்பாக செயல்பட்டு வருகிறது. புணரமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு ஆவணங்களின் நகல்களை எடுத்து செல்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...