இயற்கை அணைத்து வரவேற்கும் நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா !

நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா 1986 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தாவரங்கள் மற்றும் மரங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட விலங்கியல் பூங்காவாகும். இந்த இயற்கை பூங்கா தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் நீலகிரி மலைத் தொடரில் உள்ள உயிரினத்தின் இயல்பான மரபு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த பூங்கா மக்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

இப்பகுதியைச் சுற்றிலும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 480 இன தாவரங்கள் உள்ளன. இதில் 85 இனங்கள் நீலகிரி பையோஸ்பியர் பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த 85 இன தாவரங்களில் சுமார் 30 சதவிகிதம் காடுகளில் ஆபத்துகள் நிறைந்த வியக்கத்தக்க பகுதியில் உள்ளன என்று கூறப்படுகிறது. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ, இந்தியா மற்றும் பொட்டானிக்கல் கார்டன் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (பி.ஜி.சி.ஐ) இங்கிலாந்து ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்ட தாவர வகைகளை நீலகிரி பையோஸ்பியர் பூங்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



கோவையிலிருந்து 35 கி மீ தூரத்தில் ஆனைகட்டி என்ற ஊருக்குப் பக்கத்தில் இந்த நீலகிரி பயோஸ்பியர் இயற்கை பூங்கா அமைந்துள்ளது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலை பூங்காவில் கிட்டத்தட்ட 240 நாட்டுமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மிகவேகமாக அழிந்துகொண்டு வரும் சாம்பிராணி மரம், திருவோடுமரம் போன்ற அரிய மரங்களும் இங்கு காப்பாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இம்மையமானது பலவகைகளில் தென்னிந்தியாவின் சுற்றுச் சூழலையும் புவிச்சூழலையும் சமன் செய்து வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மழை பொழிவை அதிகரிக்க செய்கிறது.



நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்காவை குடும்பத்தோடு கண்டுகளிக்க வரும் இயற்கை ஆர்வலர்களுக்கு கூடுதலான ஒரு தகவல் தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமமும் சலீம் அலியின் பறவை சரணாலயமும் அருகாமையிலேயே உள்ளன.

விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கோவை நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.



Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...