வாகனம் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்தமைக்காக குத்தைகைதாரர்கள் மீது அபராதம்- மாநகராட்சி அதிரடி

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் வார்டு எண்- 83-ல் ராஜ வீதி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்தமைக்காக உதவி ஆணையர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, நான்கு சக்கர வாகனத்திற்கு 6 மணி நேரத்திற்கு ரூ.10 வசூல் செய்யாமல் கூடுதலாக ரூ.20-யினை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும், கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்காமல் மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

குத்தகைதாரரான ஆர்.சுப்ரமணிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பரிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...