விவசாயிகள் கடனை ரத்து செய்யாமல் இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக திமுக அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விவசாயிகள் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் கடனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.