விரைவில் புதிய விஸ்வரூபம் எடுக்கும் கோவை ரயில் நிலையம்

தென்னக ரயில்வே சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா நேற்று முன்தினம் கோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவை ரயில் நிலையத்தின் முன்புறத்தில் போதிய இடவசதி இல்லாததால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தின் முன்புறத்தில் நடைபெறும் வேலைக்கான புதிய முகப்பின் தோற்றத்தின் மாதிரி படத்தை வெளியிட்டார்.



பின்னர், ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா கூறுகையில்; கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தவறான புரிதல் உள்ளது. முறையான திட்டமிடல் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறுகிறது. ரயில் நிலையம் முன்பு பழைய எஞ்சின் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இரு புறமும் 5 மீட்டர் அளவிற்கு பொதுமக்கள் செல்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம் வாயில் வரை கூரை அமைக்கப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் மழை, வெயிலுக்கு ஒதுங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் நுழைவுவாயில் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. அரசு- தனியார் முயற்சியில் கார் பார்க்கிங் நிர்வகிக்க 2 முறை ஏலம் விடப்பட்டும் யாரும் முன்வராததால் இரு சக்கர பார்க்கிங்கை அரசே நடத்தப்படவுள்ளது. அடுத்தாண்டு ஜூலைக்குள் 600 கார் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும். இந்த பார்க்கிங் வசதி இரயில் நிலையத்தின் பின்புற நுழைவு வாயிலில் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 முதல் 3 மாதங்களில் பணிகள் துவங்கப்பட்டு 7 முதல் 8 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். 32 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், 8 சிசிடிவி கேமராக்கள் ரயில் நிலையம் வருகை, வெளியே செல்வதை கவனிக்க அமைக்கப்படும். அக்டோபரில் பணிகள் முடிக்கப்படும்" என்றார். 



மேலும், கோவை பொதுமக்களில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பெங்களூர்- கோவை இடையிலான இரவு நேர ரயிலுக்கு குறைவாகவே பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளதால் 10 முதல் 15 நாட்களில் புதிய இஞ்சின்கள் பொருத்தப்பட்டு 2 முதல் 3 மாதங்களில் புதிய உதய் ரயில் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளது என சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா கூறினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...