ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூட்டம்

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் இன்று வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.

உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...