பெண் குழந்தைகளுக்கான சேவையில் முன்னணியில் செயல்படும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம்

1935 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கிளை துவங்கப்பட்டது. இது தற்போது கோவை மாவட்டத்தின் மையப்பகுதியில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 1947ஆம் ஆண்டு பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் குழுமம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை 1949 ஆம் ஆண்டு பாவ்நகர் மகாராணி திறந்து வைத்தார்.



இதன் புதிய கட்டிடம் 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கான திட்டத்தினை சி.பி.சிங் ஐஏஎஸ் உருவாக்கினார். மற்றும் ஜி.சந்தானம் ஐஏஎஸ், சந்திரகாந்தி கோவிந்தராஜலு 45 ஆண்டுகள் இதன் தலைவராக செயல்பட்டார். கோவை மாவட்ட கிளை, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் வளர்ச்சிக்கு கணிசமாக உதவி, வழிகாட்டுதல் மற்றும் பங்களிப்பினை செலுத்தினார். தற்போது, கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பிளாட்டினம் ஜூபிலி ஆண்டு விழா கண்ட இச்சங்கத்திற்கு தற்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைவராக செயல்படவுள்ளார்.



மேலும், கோவை செஞ்சிலுவை சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் சிறப்புப் பள்ளி மற்றும் பேசுதல், கேட்டல் திறனற்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. 9 சிறார்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இப்போது ப்ரீ கேஜி முதல் 10ம் வகுப்பு வரை 50 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல், 31 மாணவர்கள் வெற்றிகரமாக தங்களது 10ம் வகுப்பினை நிறைவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐடிஐ, டிப்லமோ, பிஎஸ்இசி மற்றும் 12 ஆம் வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். 2013- 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு மாணவர்கள் மாநில அளவில் முதல் மதிப்பெண் மற்றும் மாநில அளவில் மூன்றாம் மதிப்பெண் பெற்றனர்.



பள்ளி சிறப்பு அம்சங்கள்

1. திறன் ஊக்குவிக்கும் செயல்பாடுகள். குறிப்பாக கலை,  கைவினை, நடனம், யோகா, விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன

2. மாதாந்திர மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன

3. மாதம் ஒரு முறை பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு

4. பள்ளியில் அனைத்து தேசிய மற்றும் சர்வதேச விழாக்களும் கொண்டாடப்படும்.

2013-ம் ஆண்டு மே மாதத்தில் கோவை மாவட்ட ஆட்சியரும், ஐஆர்சிஎஸ்-யின் தலைவருமான கருணாகரன் முன்னிலையில் "தளிர்" எனும் பெண் குழந்தைகளுக்கான விடுதி துவங்கப்பட்டது.

இந்த விடுதியில் 3 முதல் 14 வயது வரையிலான 33 பெண் குழந்தைகளுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள் ஆவர்.

கலை, கைவினை, நடனம், தோட்டக்கலை, தையல், கனிணி, விளையாட்டு முதலியவற்றைப் போன்ற கூடுதல் பாடத்திட்டங்களில் பயிற்சியும் வழங்கப்படும், . சமுதாயத்தில் குழந்தைகளுக்கான ஆதரவு, கல்வி ஆகியவற்றை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...