வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி ரயில் எண் 06085: ஆகஸ்ட் 30 செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06086: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி ரயில் எண் 06087: ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06088: ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06091: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06092: செப்டம்பர் 1, 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் எண் 06016 : ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06015: செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

நாகர்கோவில் டவுன் -வேளாங்கண்ணி ரயில் எண் 06090: ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டவுனில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். 

ரயில் எண் 06089: ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் டவுன் வந்தடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - நாகப்பட்டினம் ரயில் எண் 06093: செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

வேளாங்கண்ணி - மும்பை பாந்த்ரா முனையம் ரயில் எண் 09028: ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு மும்பை பாந்த்ரா முனையம் சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ரேணிகுண்டா, கொடுரூ, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, முத்தனரு, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், யாத்கிர், வாதி, குல்பர்கா, சோலாபூர், தாந்த், புணே, லோனாவாலா, கல்யாண், வசாய் சாலை, போரிவலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...