நீலகிரியில் உள்ள நீர்மின் நிலையங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பைக்காரா மற்றும் சிங்காரா நீர்மின் நிலையங்களை இன்று (ஜூலை 3) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு (2016-2018) தலைவர் எஸ்.முத்தையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி பைக்காரா மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழத் தலைவர் எஸ்.முத்தையா, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தார்.



பைக்காரா இறுதி நீர்மின் நிலையம் 150 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது. இதற்கு நீராதாரம் கிளன்மார்கன் அணையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பானது 154.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் இயக்க உரம் 1039 மீ. இந்நீர்மின் நிலையம் துவக்கப்பட்டு ஆண்டு 2005. ஒரு வருடத்திற்கு சராசரியாக 265.94 மில்லியன் யூனிட் கிடைக்கப்பெறுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 584 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிங்காரா நீர்மின் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்ட எஸ்.முத்தையா அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...