எர்ணாகுளம்- வேளாங்கண்ணிக்கு பொள்ளாச்சி வழியே ஆக.,31 முதல் சிறப்பு ரயில் இயக்கம்


ஓணம் பண்டிகை வரும் செப்.,3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு இரவு 9 மணிக்கும், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு மதியம் 2:20 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

அதேப்போல், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். 

ரயில் செல்லும் வழித்தடங்கள்:

ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.

அதில் ஈரடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி., 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது மற்றும் 2 நிலை பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் உபகரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...