கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்று நிரை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றில் நகராட்சி சாக்கடை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனால், அந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்று பொதுமக்களின் கோரிக்கையான பவானி ஆற்றினை தூய்மைப்படுத்தியும் மேட்டுப்பாளையம் அருகே விளாமருதூர் பவானி ஆற்றில் இருந்து சுத்தமான குடிநீரை எடுத்து மேட்டுப்பாளையம்- சிறுமுகை- திருப்பூர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகள் அடங்கிய கோரிக்கை மனுவினை கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபி கட்சியினர் வழங்கினர்.