எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது நீலகிரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஸ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.



ஆலோசனைக் கூட்டத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அதற்கான கோப்புகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



முன்னதாக உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான மாபெரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இம்முகாமில் சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய் நிபுணர், பல் பரிசோதனை நிபுணர், கண் பரிசோதனை நிபுணர் மற்றும் பொது நல மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...