அண்ணா பல்கலைகழகத்தில் "கலாம் வனம்" முதாலம் ஆண்டு நிறைவு விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் வகையில், அண்ணா பல்கலைகழக மண்டல வளாகத்தில் சிறுதுளி அமைப்புடன் இணைந்து "கலாம் வனம்" திட்டம் முதல் கட்டமாக 27.07.2016 அன்று 5,000 மரக்கன்றுகள் நட்டுத் துவக்கி வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டமாக 16.10.2016 அன்று 4,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்றாம் கட்டமாக 11.01.2017 அன்று 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. நான்காம் கட்டமாக 15.03.2017 அன்று 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுமார் 500 பழங்கள் மற்றும் அரிதான தாவரங்கள் நடப்பட்டன. 7.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சேகரிப்பு குளம் நிறுவப்பட்டது.



டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, மேலும் 7,000 மரக்கன்றுகள் 27.07.2017 வியாழக்கிழமை இன்று காலை 9:00 மணியளவில் நடப்பட்டது. இதில் ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஷா, அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மூத்த பத்திரிக்கையாளர் சுசீ திருஞானம், ரேடியோ சிட்டி பிரபு, கோவை மண்டல வளாக முதன்மையர் சரவணக்குமார், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...