மாணவி வளர்மதி மீது பொய் வழக்கு - டிராபிக் ராமசாமி

மாணவி வளர்மதி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை வ.உ.சி மைதானத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் வ.உ.சி. மைதானத்தில் பொது மக்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என தகவல் வந்ததால் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. மைதானம் ஆளுங்கட்சியினருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே வாடகைக்கு கொடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டியவர், வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் அல்லது விளையாட்டு திடலாக மாற்றலாம் என தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தி மாநகராட்சிஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மாணவி வளர்மதி மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர் என கூறிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் சினமா பைனான்சியர் போத்ரா மீது ஏன் குண்டாஸ் போடவில்லை என கேள்வி எழுப்பினார். கொள்ளையனே வெளியேறு என்ற பெயரில் சென்னை மெரினாவில் வரும் 8ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...