விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன. 

எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...