ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிசியோதெரபி மருத்துவ கட்டணம் உயர வாய்ப்பு !


ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிசியோதெரபி மருத்துவக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது என கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 80 சதவிகித மருத்துவ சேவையை தனியார் மருத்துவமனைகளே வழங்கிவருகின்றன. இதனால் மருத்துவ சேவைக்கான வரியில் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. ஆனால் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான மருத்துவ உபகரணங்களின் வரி உயர்வானது மறைமுகமாக மருத்துவ கட்டணங்கள் உயர அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவ சேவை முழுமையாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக இந்தியர்களை அதிகம் பாதிக்கின்ற சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுக்கான டையலைஸிஸ் சிகிச்சைக்கான உபகரணங்களுக்கான வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மற்றும் இருதய கோளாறுக்கான பேஸ் மேக்கர் உபகரணத்திற்கான வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கண் கோளாறை கண்டறியும் உபகரணங்களுக்கான வரி விதிப்பு 9 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்ந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படும் அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் எலும்பை இணைக்கும் தகடுகள், செயற்கை மூட்டு போன்ற மருத்துவ உபகரணங்களின் வரி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவைகள் அனைத்தும் இன்றியமையாத மருத்துவ சேவைகளின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பாக அமைவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், பிசியோதெரபி மருத்துவ சேவைகளுக்கான சேவை வரியில் விலக்கு அளிக்கபட்டாலும் பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களின் பெரும்பாலானவை வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சில சிகிச்சை உபகரணங்கள் 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் உடற்பயிற்சி சிகிச்சை உபகரணங்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உடல் ஊனமுற்ற நோயாளிகளுக்கு வழங்க கூடிய வீல் சேர் வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனால் பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. மற்ற மருத்துவ துறையை விட பிசியோதெரபி துறை சார்ந்த உபகரணங்களுக்கான வரிவிதிப்பு அதிகம். அதுமட்டுமல்லாது புதியதாக தொடங்கபடவுள்ள பிசியோதெரபி மருத்துவமனைக்கான முதலீட்டை இந்த வரி விதிப்பு அதிகரித்துள்ளது. கட்டிட கட்டுமான பொருட்களின் வரி உயர்வு, பர்னிச்சர் பொருட்களின் வரி உயர்வு, மருத்துவ உபகரணங்களின் வரி ஆகியவற்றால் பிசியோதெரபி மருத்துவ துறைக்கான மூதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் பிசியோதெரபி மருத்துவமனைகள் உருவாகுவது குறைய வாய்ப்பு உள்ளது. இது வளர்ந்து வரும் பிசியோதெரபி மருத்துவ துறையின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கிறது. மற்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்தியாவில் வந்து சிகிச்சை எடுக்க நடைமுறைகள் தளர்த்தபட்டுள்ளது மற்றும் வரி விலக்கு போன்றவை வரவேக்கத்தக்கவையாக இருந்தாலும் இந்திய மக்களுக்கு தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைத்திட மருத்துவ சேவை வரி மட்டுமல்லாது மருத்துவ உபகரணங்களுக்கான சரக்கு வரிகளை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...