ரூ. 2000 விற்க முயன்ற குழந்தை மீட்பு- தாயிடம் குழந்தை நல குழு விசாரணை


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தி (35). கோவை தடாகம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு 2000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.



குழந்தையை வாங்க இருந்த தம்பதியினருக்கு சில சந்தேகங்கள் எழுந்ததால் இது குறித்து உக்கடம் பகுதியில் உள்ள சைல் லைன் அமைப்பினரிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆய்வாளர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவ்வமைப்பினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தடாகம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகாமலேயே தவறான தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் விற்க முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்த மற்றொரு குழந்தையை சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக விசாரணையில் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல குழுவினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...