சதமடித்த தக்காளி விலை- இனி தக்காளி சாதம் "கட்"

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அன்றாட உணவில் அத்யாவசியமான ஒன்று தக்காளி ஆகும். ஒவ்வொரு உணவிலும் தக்காளி இன்றியமையாததாக உள்ளது. இதில், கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளுக்கு தக்காளி தேவை 80 முதல் நூறு லாரிகள் வரை தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை சரிவர லாரிகளில் வந்த தக்காளி தற்போது வெறும் 30 முதல் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துவிட்டது.

அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி சந்தைக்கு புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் சந்தையுலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துவிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கோவையில், தற்போது தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயிக்கு விற்கப்படுவது சிறு, குறு நடுத்தர வர்க்கத்தினரை மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஜிஎஸ்டி உயர்வு, பெட்ரோல் விலையில் அன்றாட மாற்றம், வறட்சி என்று அன்றாடம் பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு தற்போது காய், கறிகளின் விலை உயர்வும் பேரடியாக அமைந்துள்ளது.

இனிமேல் வெங்காயம் வெட்டினால் மட்டுமல்ல, தக்காளிக்கும் கண்ணீர் வடியும்...

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...