வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு (2017- 2018) 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைந்தளவே மழைப்பொழிவை தந்ததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அணைகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டன.

நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இல்லாததால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இவ்வாறு வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வறட்சியினால் விவசாயிகள் பாதிக்காமல் இருந்திடும் வண்ணம் பயிர் மேலாண்மைக்கு சொட்டுநீர் பாசனத்தின் அவசியமும், பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரியதொடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண், தோட்டக் கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு கரும்பு 190 எக்டர், பருத்தி 25 எக்டர், தென்னை 500 எக்டர், மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களுக்கு 100 எக்டர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 400 எக்டரும் சேர்த்து மொத்தம் 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு 40 சதவிகிதமும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 70 சதவிகிதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டுநிர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்காட்டு, ஆதார் எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேலும் தகவலுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், லாலிரோடு, கோவை- 13. தொலைபேசி எண் 0422- 2432739 தொடர்புகொள்ளலாம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...