பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் வடக்கிப்பாளையம், இராமப்பட்டினம் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் இன்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-



மழைகாலங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுதல் மற்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வேண்டும்.

நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். மேலும் குடியிறுப்பவர்களுக்கு தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமரிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளித்தல் வேண்டும். 



டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றம் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவமுகாம் தொடர்ந்து நடத்துதல் வேண்டும். பொதுமக்களிடத்தில் சுகாதாரக் கல்வி அளித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும்  தொண்டு நிறுவனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்துதல் வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமகவே மருந்துகள் உட்கொள்ளாமல் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளும் சிகிச்சைகளுக்கான அனைத்து வசதிகளும் உள்ளன.



மேலும், டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டால் உடனடியாக துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், உயர் சிகிச்சைக்கு ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனைக்கோ, அல்லது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். மழைகாலங்களில் பொதுசுகதாரத்;துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து மிகுந்த சிரத்தையுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். 

பொதுமக்களும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், யாருக்கேனும் தொடர் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறி ஏற்படுமாயின் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கோ, அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கோ தகவல் அளித்தல் வேண்டும். மேலும் வீட்டிற்கு ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பொதுசுகாரதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...