தமிழ்நாடு அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்ததாவது:- 



நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. 

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, ரூபாய் 288.91 கோடி நிதியை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.



இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 22000-க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மேலும் இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ்நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் எண் ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் நிதி நிலை விபரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 இலட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். முதற்கட்டமாக கடந்த நவம்பர்-2016ல் சென்னை, ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிப்பதிவேடு கனிணிமயமாக்கல் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல்-2017 முதல் இதர மாவட்டங்களிலும் பணிவிரிவாக்கம் செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர்-2017க்குள் இப்பணியினை முடித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது.

இதன் மூலம் பணிப்பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கபூர்வப் பணிகளில் ஈடுபட முடியும். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும். பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப் பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதனால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 33907 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் என்றார். 

இக்கூட்டத்தில் ஹரிஹரன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கருவூல கணக்குத் துறையின் கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை) த. செல்வசேகரன், மண்டல இணை இயக்குநர் கோவை நடராஜன், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் அனைத்து அரசுத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...