கோவை பொள்ளாச்சி சாலையில் மீண்டும் துவங்கியது பேருந்துகளுக்கிடையேயான போட்டி

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்துtU;k சூழலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு செல்வதால் சாலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பொள்ளாச்சி சாலையில் சென்றது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேகமாக சென்ற ஏழு பேருந்துகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு நாட்கள் மட்டும் குறைவான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல் மீண்டும் தற்போது உடுமலை, பழனி செல்லும் பேருந்துகள் கிணத்துக்கடவு பகுதியை தாண்டியவுடன் அதிவேகமாக இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் பேருந்தில் பயணிக்கும் மக்களின் உயிர்க்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே வேகமாக செல்லும் பேருந்துகள் மீது அரசியல் தலையீடுகளை தவிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...