நீலகிரியில் மக்களின் மனுக்கள் குறித்து விரைவில் தீர்வுகாண ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 104 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டு அதன்மீது உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 104 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.



அதனை தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு பேரணியையும், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றும் தரும் வகையில் இலவச திறன் பயிற்சிகளின் விவரங்கள் அடங்கிய  அரங்கினையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன், மாவட்ட வழங்கல் அலுவலர் தனபால் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...