தென்னம்பாளையம் அருகே காவலாளிக்கு துப்பாக்கிச் சூடு



கோவை மாவட்டம், அம்மன் குளம் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் அரசூர் பிரிவு தென்னம்பாளையம் பகுதியில் செல்வகுமார் என்றவருக்கு சொந்தமான உணவு விடுதியில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த உணவகத்தில் மது பானம் முறையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விடுதி உரிமையாளர் செல்வகுமார் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். பின்னர் கதவை மூட கூறியவர் மது போதையில் காவலாளி தேவராஜை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தேவராஜ் மயங்கி விழுந்ததால் பதற்றம் அடைந்த செல்வகுமார் மற்றும் மேலாளர் சக்தி இருவரும் செல்வராஜின் முதுகில் பாய்ந்த குண்டை நீக்கிவிட்டு, பின் அவரது வாயில் மதுவை ஊற்றியதாக காயமடைந்த செல்வராஜ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய தேவராஜ், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். வலி அதிகமாகவே பின் தனது மனைவியிடம் பணிபுரியும் இடத்தில் நடந்ததை கூறினார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற நிலையில் சட்டம் சார்ந்த பிரச்சனை என மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. 

தொடர்ந்து உணவு விடுதியின் உரிமையாளர் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அடுத்து செல்வராஜ் தென்னம்பாளையத்தில உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது சாதாரண துப்பாக்கியால் ஏற்பட்ட காயம், இதை பெரிது படுத்த வேண்டாம் என அலட்சியமாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...