மேம்படுத்தப்பட்ட தரத்துடன் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் சக்கர நாற்காளி இருக்கை

உடல் ஊனமுற்றோர் வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்டதே சக்கர நாற்காளி வாகனம். இவை 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதனைத்தொடர்ந்து, சில மாறுபட்ட அம்சங்களுடன் 20ம் நூற்றாண்டில் சக்கர நாற்காளிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சக்கர நாற்காளி இருக்கை உடல் ஊனமுற்றோருக்கும், வயது முதிர்ந்தோருக்கும் நல்ல பயனை அளித்தது. இவை ரிமோர்ட் கன்ரோல் மூலம் செயல்படக்கூடியதாக மேம்படுத்தப்பட்டன. இருப்பினும் இதில் பொருத்தப்பட்ட கன்வன்சனல் மோட்டாரைசுடு மோட்டார்கள் மிகவும் கடினமானதாகவும், ஊனமுற்றோர்களுக்கு சிரமங்களையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இந்நிலையில், கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் மிக குறைந்த விலையில், அதிகத் தரத்துடன் சக்கர நாற்காளி உருவாக்கும் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஜாய் ஸ்டிக், புளூடூத், கைபேசியின் மூலம் இயக்கும் தன்மை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சிந்தனையை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பையோமெட்ரிக் இன்ஜினியரிங் துறை வழங்கியுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான நிதி உதவியினை சையின்ஸ் அன்டு டெக்னாலஜி துறை வழங்குவதற்கான திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மூன்று வருடத்திற்கு சேர்த்து 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பிஎஸ்ஜி மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட உள்ள இந்த சக்கர நாற்காளி ஒரு முறை மின்னூட்டம் செய்யப்பட்டால் தொடர்ந்து 12 மணி நேரம் இயங்கும் தன்மையுடையது.

டாக்டர்.வி.ராமமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி.ஜி மருத்துவமனைகளின் ஏ.பார்த்திபன் ஆகியோர் கூறுகையில், இந்த சக்கர நாற்காளி கண்டுபிடிப்பானது ஊனமுற்றதால் முடங்கியுள்ள நபர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். பிறறின் உதவியின்றி ஜாய் ஸ்டிக், புளூடூத் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தாங்களே செயல்பட்டுக் கொள்ள முடியும். ஊனமுற்றோர்களின் எதிர்பார்ப்பை இது எளிமையாக்கும்' என்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...