அன்னூர் வட்டம், கெம்பநாயக்கன்பாளையத்தில் 67 பயணாளிகளுக்கு ரூ. 54.10 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் இன்று தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய பேருந்து வழித்தடம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில்,
அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடிநீர் செறிவுட்டப்பட்டு பாசன வசதிகளை மேம்படுத்தப்படும்.
வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், நிரந்தர தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக அவினாசிக்கு குடிநீர் வழங்க மூன்றாவது கூட்டு குடிநீர்த்திட்டம் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்திட்டப்பணிகளானது ஓர் ஆண்டில் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இதுபோன்ற மக்களின் தேவைக்கான அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான நேரத்தில் செய்து தரப்படும்.
மேலும், அன்னூர் வட்டாட்சியர் கட்டட பணிகள் நடைபெற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அன்னூர் பேரூராட்சி பேருந்து நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புற வழிச்சாலை அமைக்க நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இன்று வருவாய் துறையின் மூலம் 36 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை, 17 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.70 மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.54.10 மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்கு சென்று வர ஒன்னகரகம்பாளையம் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சண்முகசுந்தரம், அன்னூர் வட்டாட்சியர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளவரசன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.