தகுதியுள்ள மாணவர்களை நீட் தேர்வு தகுதியற்ற மாணவர்களாக்குகிறது -பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

சட்டசபை நடத்து கொண்டிருக்கும் வேளையில் இனிமேலாவது மாநில அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதத்தை நடத்தி மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிற்கு மாநில அரசு எவ்வித அழுத்தமும் ஏன் தரவில்லை எனவும் பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவையில் பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வு நடத்தியது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு என்னவென்றால் மாநிலங்களில் நிலவக்கூடிய அசாத்திய சூழல் பற்றி மாநில அரசுக்குதான் தெரியும் அதனால் மத்திய கல்வி நிறுவனங்கள் தவிர மற்றவைக்கு மாணவர்களை மாநில அரசே சேர்க்கலாம் என்று கூறியுள்ள நிலையில் மாநில அரசு நீட் தேர்வு நடத்தாமல் இருக்க என்ன செய்தது? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், நீட் தேர்வு மிகவும் குழப்பமான கல்வி சூழலை உருவாக்கியுள்ளதாகவும், தமிழக அரசு தமிழக மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை காவு கொடுக்க கூடாது எனவும் அவர் கூறினார். தகுதியுள்ள மாணவர்களை நீட் தேர்வு தகுதியற்ற மாணவர்களாக்குகிறது. அதனால் அதனை கைவிட தாங்கள் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்தபடி நீட் தேர்விற்கு எதிராக ஆளும் அதிமுக அரசு முழுவீச்சுடன் செயல்படவேண்டும். என அவர் கேட்டுகொண்டார். குறிப்பாக மத்திய அரசு மசோதாவை நிராகரித்து மாநில அரசு நீதிமன்றத்தை நாடாவிட்டால், நிச்சயமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும், சட்டசபை நடத்துகொண்டிருக்கும் வேளையில் இனிமேலாவது மாநில அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதத்தை நடத்தி மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என அவர் கூறினார். மேலும் மத்திய அரசிற்கு மாநில அரசு எவ்வித அழுத்தமும் ஏன் தரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு தொடர்பாக ஒரு முடிவு வரும் வரை அனைத்து வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்விகளின் கவுன்சிலங்கையும் ஒத்தி வைக்க வேண்டும். எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...