கோவையில் எட்டு குளங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் சுமார் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை முதல் கட்டத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, கோவையில் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் மட்டும் ஸ்மார்ட் சிட்டியின் தற்போதைய திட்டத்திற்கு ரூபாய் 1,570 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வகுப்பது என்பது மிக முக்கியமான பணி, தொலைநோக்கு பார்வையுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகரம் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்குரிய திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயலாக்கத்திற்கு வருகின்றன.

கோவை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க பல்வேறு புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 8 குளங்களில் ஏரிகளை சுத்தப்படுத்தி புதுப்பித்தல், ஸ்மார்ட் ட்ரீ, ஸ்மார்ட் பள்ளி, திடக்கழிவு மேலாண்மை, மாதிரி சாலை, காற்று மாசுபாட்டு கருவிகள் அமைத்தல், சோலார் மின் விளக்கு வசதி, வ.உ.சி உயிரியல் பூங்கா மேம்படுத்துதல், நகர் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் முழுவீச்சுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 

ரூ.500 கோடி மதிப்பில் குளங்கள் மேம்பாட்டுத் திட்டம்: கோவையில் உள்ள நரசாம்பதி, செல்வம்பதி, கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்கள் மேம்படுத்த இந்த குளங்களில் தற்போது கலக்கப்படும் கழிவு நீர்களை குளங்களில் கலக்காமல் தடுத்து, மாற்று வழிகளில் கழிவு நீர்களை விடவும், மேலும் குளங்களில் நீர்களை ஆய்வு செய்தும், குளங்களை தூர்வாரி புரணமைத்து பருவ மழைக் காலங்களில் நீர் தேக்கம் அதிக்கப்படுத்தவும், பூங்கா அமைத்தும், குளங்களில் நீரூற்று அமைத்தும் அழகுபடுத்தப்படும். 

மேலும், மேற்குறிப்பிட்ட 8 குளங்களையும் இணைக்கும் வகையில் சாலை அமைத்து அதில் மிதிவண்டிகள் மூலமாக பொதுமக்கள் பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தற்போது சர்வேயர் மூலம் நிலஅளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இன்னும் 10 மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளங்கள் மேம்படுத்தப்படுவத்தினால் தற்போது இந்த குளங்களில் அருகில் வசித்து வரும் பொதுமக்களை வெள்ளலூர் பகுதிகளுக்கு மாற்ற மாநகராட்சி சார்பில் குடிசை மாற்று வாரியம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக ரூபாய் 233 கோடி அடுக்குமாடி குடியிருப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...