கோவை அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் காய சிகிச்சை பிரிவில் இன்று மின்கசிவு காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த தீயணைப்பு கருவியின் மூலம் தீ அனைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் புகை மூட்டம் வரும் இடத்தில் புகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.