கோவை சிபிஎம் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது. பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை நிறுத்தியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் விமர்சனம் செய்வது சரியல்ல.
ஜி.எஸ்.டி மசோதாவினை தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக அரசிற்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கோவையில் ஜி்.எஸ்.டி குறித்து விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரும் 22-ம் தேதி வரவுள்ளார். பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வாய்ப்பினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க உள்ளனர். அன்றைய தினம் மாலை திருப்பூருக்கு செல்லும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜி.எஸ்.டி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
கோவை சி.பி.எம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. சிபிஎம் கட்சியினர் பொறுப்புணர்வு இல்லாமல் ஆதாரம் இன்றி பேசக்கூடாது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை பாஜக எப்போதும் ஆதரிக்காது.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் இது வரை 40,000 பேர் பதிவு செய்துள்னர். நாளை யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பகுதி வாரியாக பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.