அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வைத்துள்ளவர்கள் வரும் நவ. 3-க்குள் வரைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் பொருட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி 20.10.2016-க்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்திக்கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in)  இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...