சென்னையில் குடிநீர் தேவைக்காக மாங்காடு, சிக்கராயபுரம் கல்குவாரிகளிலிருந்து குடிநீர் விநியோகம் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு


மாங்காடு அருகே, சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்; பருவமழை குறைவு, கடும் வெப்பம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளிலும், வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கின்றது.  கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை குறைவாக இருந்ததால் குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு கடுமையாக குறைந்தது.  எனவே, புறநகர் பகுதிகளில் இருக்கும் மரபான நீர் ஆதாரங்களுடன் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர், விவசாய கிணறுகள் போன்ற மரபு சாராதவற்றில் இருந்தும் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 22-க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட், அண்ணா பல்கலை கழகத்தின் சுற்றுச் சூழல், புவி அமைப்பியல் துறை உட்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, சென்னை நகருக்கு வினியோகம் செய்ய உகந்தது என ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. குவாரிகளில் இருந்து தண்ணீரை பம்ப் செய்து குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

மேலும் இதிலிருந்து தினசரி 3 கோடி லிட்டர் வீதம் சுமார் 300 கோடி லிட்டர் நீர் 100 நாட்களுக்கு பெற திட்டமிடப்பட்டன.  இப்பணிகள் ரூ 13.63 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர் இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம் 600 மி.மீ விட்டமுள்ள DI இரும்பு குழாய்கள் 2900 மீட்டர் நீளத்திற்கும் 600 மி மீ விட்டமுள்ள HDPE  பிளாஸ்டிக் குழாய்கள் 900 மீட்டர் நீளத்திற்கும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்ப்செட் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள் கல்குவாரியில் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் திருப்திகரமாகவும் உள்ளது. 

இதனை தொடர்ந்து 09.06.2017 முதல் தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், கே.என்.ராமசந்திரன், எம்பி, கே.பழனி எம்எல்ஏ., வாலாஜாபாத் பா. கணேசன், முன்னாள் எம்எல்ஏ.,சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.அருண்ராய் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...