சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ள பெற்றோர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பஞ்சனப்பட்டி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (47). இவரது மனைவி மங்கையர்கரசி ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பாக்யஸ்ரீ (17) ஓமலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பாலிடெக்னிக் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.



பாக்யஸ்ரீ-க்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க சக்தி சேலத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் நவீன் பாலாஜியிடம் உதவிகோரியுள்ளார். அதைத்தொடர்ந்து, நவீன்பாலாஜி தனக்கு சொந்தமான ஆயுர்வேத அக்குபஞ்சர், சித்தா மற்றும் மூலிகை மருத்துவமனை கோபி கவுந்தப்பாடி அருகே உள்ள எல்லீஸ்பேட்டையில் உள்ளதாகவும், அங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2ம் தேதியன்று மேற்குறிப்பிட்ட மருத்துவமனையில் பாக்யஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைகள் அளித்து வந்துள்ளனர். அவருடன் சக்தி மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர் இருந்துள்ளனர். 

இந்நிலையில், உறவினரின் திருமணத்திற்காக 7ம் தேதியன்று சக்தி மற்றும் மங்கையர்கரசி சென்ற நிலையில், மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் பாக்யஸ்ரீ-யின் உடலை ஓமலூரில் உள்ள அவரது விட்டின் முன்பு வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளது. நேரில் சென்று விசாரித்த போதும் மருத்துவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று சிறுமி பாக்யஸ்ரீ-யின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 



அப்போது, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவமனையின் தவறான சிகிச்சையினாலேயே பாக்யஸ்ரீ உயிரிழந்துவிட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து, அழகான உருவம் பெறலாம் என்ற போலி விளம்பரங்கள் செய்து பெண் உயிரோடு விளையாடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். 



இந்நிலையில், பணம் கொடுக்காவிட்டால் சடலத்தை தர மாட்டோம் என அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறுவதாகக் குற்றச்சாட்டி பாக்யஸ்ரீ-யின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்க முற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...