தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - எம்.பி. டி.கே.ரங்கராஜன்.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம், கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது என்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டார். மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்வதை தடை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இதன்மூலம் நாடு தழுவிய ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வைக்கும் பெருமை வாய்ந்த பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுக பெரிய சிக்கலில் இருப்பதாகவும், தினசரி செத்து செத்து பிழைப்பதால் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேச பயப்படுகிறது எனவும் அவர் கூறினார். வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அது அவரது ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடியரசு தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் சோதிடம் சொல்வது புத்திச்சாலித்தனம் இல்லை என பதிலளித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...