ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உணவகங்கள், மருந்தகங்கள் முழுஅடைப்பு போராட்டம்.

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் மே 30ம் தேதியன்று (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.



அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.



இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...