கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல் ஆணையரிடம் இளைஞர் புகார்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக இளைஞர் ஒருவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் அவரது நண்பர்களான நேரு கல்லூரியில் பயிலும் ஹரி, கிஷோர், கண்ணன் ஆகிய மாணவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

அப்போது மகேஷிடம் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் மடிக்கணினி, கைபேசி போன்றவற்றை மகேஷிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது மாணவர்களின் கைபேசிய சோதித்த போது அதில் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா, கொக்கெயின், எல்.எஸ்.டி போதை பொருட்களை வாங்கி கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மகேஷ் கேட்ட போது, மாணவர்கள் தகாத முறையில் பேசுவதோடு சிலர்  வழக்கறிஞர் என்ற பெயரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கல்லூரிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தனது உயிருக்கு பாத்துகாப்பு வழங்கக் கோரியும் மகேஷ் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...