பைக்ரேஸ் வீரர்களுக்கு சுசுகியுடன் இணைந்து ஜே.கே. டயர் வழங்கும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த பைக்ரேஸ் வீர்ர்களை இருபது ஆண்டுகளாக இனங்கண்டு ஊக்கமூட்டி வருகிறது ஜே.கே. டயர் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இது நம்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பைக்ரேஸ் வீரர்களை உருவாக்கி உரமேற்றும் புதியபணி.



இந்திய மோட்டார் பந்தயக்களத்தில் புதுமைகளைப் புகுத்திய ஜே.கே.டயர், உலகின் முன்னணி நிறுவனமான சுசுகியுடன் கைகோர்க்கிற இந்த நிகழ்வு, இந்திய பைக்ரேஸ் களத்தில் தனித்துவமான தேசிய பைக்ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக அமையும். கடந்த 20 ஆண்டுகளில் எட்டமுடியாத இலக்கை இது எட்டியுள்ளது. 

இந்த போட்டிகள் பைக்ரேஸில் ஆர்வத்துடன் இந்தியாவின் மூலைமுடுக்கிலும் முயன்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பளித்து, அவர்களின் சாம்பியன் கனவை மெய்யாக்கும். 

ஏரத்தாள சர்வதேச பைக்பந்தய வீர்ர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் இப்பொழுதிருந்து நாங்கள் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம் என்கிறார் ஜே.கே.டயர்ஸ் மோட்டார்ஸ் போர்ட் தலைமை நிர்வாகி சஞ்சய்சர்மா. 

இருசக்கர மோட்டார் வாகன உலகில் தடம்பதித்த ஜே.கே.டயர்ஸ், மேலும் முன்னேறி பைக்ரேஸ் சாம்பியன்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பார்முலா ஒன் வீர்ர்களான நரேன்கார்த்திகேயன், கருண்சண்டாக், மற்றும் புதிய பாணியிலான வீரர் அர்ஜூன்மைனி ஆகியோர் ஜே.கே.மோட்டார் ஸ்போர்ட் ஆதரவால் உயர்ந்தவர்கள்.

ஜே.கே.டயர்ஸ் வழங்கும் சுசுகிஜிஜ்ஜர்கப் 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் இருபிரிவுகளாக நடைபெறும். 12 வயதிலிருந்து 16 வயதுடையோருக்கானது ஒருபிரிவாகவும், மற்றொன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியாக அமையும்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...