ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் வருகிற மே 30 ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.



கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியில் உணவகங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் உடனடியாக ஹோட்டல் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தி வருகிற மே 30 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேக்கரி மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட உள்ளன. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவளிக்க உள்ளன. மேலும், இப்போராட்டத்தின் காரணமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட உள்ளது என கூறினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...