"நாளை சுவாசிக்க காற்று வேண்டுமெனில் இன்றே மரம் நடுவீர்''- ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்ட செல்வகுமார்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தனி மனிதராக காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர், உடல் முழுவதும் மரக்கன்றுகளை சுமந்து வந்து மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டார்.



இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், திரும்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் வசித்து வருகிறேன். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7 வருடங்களாக மரம் வளர்ப்பு குறித்து தனி மனிதனாக மக்களிடைய விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். 

இதற்காக பிரத்யேகமாக ஆடை தைத்து அதில் 70 மரக் கன்றுகளை வைத்துள்ளேன். இது அனைத்தும் சேர்த்து 100 முதல் 120 கிலோ எடை வரை இந்த ஆடை இருக்கும். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களைக் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த 70 மரக்கன்றுகள் வைத்துள்ளேன்.

மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம் மரங்களை வெட்டியதே. தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நடவுசெய்தால் மட்டுமே மழை பெய்யும். 

தமிழ்நாடு முழுவதும், அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும், இலவசமாக மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறேன். 

நம் எதிர்கால சந்ததியினர் சுவாசிக்க நாம் தற்போதே மரம் நட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பனைமர விதைகளை நடவு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கும் சொந்த செலவில் பனை விதை வாங்கி விநியோகித்து வருகிறேன்.

மழை பெய்ய கோவில்களில் சிறப்புப் பூஜைகளையும், யாகங்களையும் நடத்துவதைத் தவிர்த்து மரம் நட அரசும், மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...