கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 5 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பிரான்சிஸ் மகன் அணில்(50) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K.ரெட்டியின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K.ரெட்டி, இ.கா.ப., முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (26.09.2026) பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிவாஜி காலனி அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பிரான்சிஸ் மகன் அணில்(50) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 5 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அணிலை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.