கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி யுவா 2026 இன் இரண்டாம் நாள் நிகழ்வாக நடைபெற்றது. MulticoreWare நிறுவனத்தின் சஷிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.


Coimbatore: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான 27-வது ஆண்டு முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி "யுவா 2026 Freshmen Induction Programme Day - 2" நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் புதிய மாணவர்களுக்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 8, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார் முன்னிலை வகித்தார். காலை 10.30 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் சிறப்புற நடைபெற்றது.

MulticoreWare Inc., சென்னை நிறுவனத்தின் தலைமை மனிதவள அலுவலர் சஷிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு தனது அனுபவங்களையும், தொழில்துறை எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புக்கான திறன்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கற்பகம் பொறியியல் கல்லூரியின் டீன் சோபியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் Dr. P. மணிமாறன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...