கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பீளமேடு பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ல் இன்று காலை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.



இன்று காலை பீளமேடு முருகன் கோயில் வீதி பகுதியில் இயங்கி வரும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலை கடையை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நியாய விலை கடை ஊழியர்கள் உடன் இருந்தனர். பொது மக்களிடம் அனைத்து பொருட்களும் சரியாக கிடைக்கிறதா என்று விசாரித்து கருத்து கேட்டறிந்தார்.



தொடர்ந்து பீளமேடு பாரதி காலனி பிரதான சாலை பகுதிக்கு சென்ற கவுன்சிலர், சாலை ஓரத்தில் உள்ள செடிகள் மற்றும் குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை நேரடியாக கண்காணித்தார். சுத்தம் செய்யப்பட்ட செடிகள் மற்றும் குப்பைகளை ஒரே இடத்தில் வைக்குமாறு தூய்மை பணியாளர்களிடம் வழிகாட்டுதல் வழங்கினார்.



மேலும் பீளமேடு மாரியம்மன் கோயில் வீதி பகுதிக்கு சென்று, தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பேசிய கவுன்சிலர், சாலையோரத்தில் குப்பைகள் போடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

வார்டு 27-ல் நியாய விலை கடை, சாலை தூய்மை மற்றும் குப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...