மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.


Coimbatore: மீலாதுன் நபி விழாவையொட்டி அனைத்து வகையான மதுபான கடைகளை மூடுவதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாளை (26.08.2026) புதன்கிழமை மீலாதுன் நபி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் Dry Day ஆக கடைப்பிடிக்கப்படுவதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபான கடைகளையும், மதுக்கூடங்களையும், மனமகிழ் மன்றங்களையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள் (FL1), பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் (IL2) செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீலாதுன் நபி தினத்தன்று மதுபான விற்பனையை தடை செய்வது மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கையாகும். இந்த உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்து வைத்தால் உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பவன் குமார் எச்சரித்துள்ளார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...